வாலிபருக்கு வெட்டு: ஒருவர் கைது
புழல்: புழல் அடுத்த மதுரா மேட்டுப்பாளையம் அண்ணாநகரில் வசிப்பவர் நாகூரான் என்ற நாகூர்அனீபா (25). இவர் நேற்று காலை வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது புழல் லிங்கம் தெருவை சேர்ந்த சுரேஷ் (34), அவரது தம்பி மோகன் (32) ஆகியோர் அந்த வழியாக வந்தனர். இவர்களுக்கு இருந்த முன்விரோதம் காரணமாக அனீபாவிடம் தகராறு செய்த சுரேஷ், மோகன் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து நாகூர் அனீபாவை சரமாரி குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த அனீபா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.இது குறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர்.