நாகை:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிடுவதுடன், தமிழக மீனவர்கள் மீன்பிடி எல்லையை தாண்டியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய கருத்தை தெளிவாக விவரிக்கவும் உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று கூறியிருந்தது. இவ்வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி அக்னிகோத்ரே, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என்றும், கச்சத்தீவை பார்வையிடுவதற்கும், கச்சத்தீவில் உள்ள செயின்ட் ஆண்டனி சர்ச்சில் ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவிழாவில் பங்கேற்பதற்கும் மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இலங்கையிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது.ஐகோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பதில் மனுவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத் தலைவர் மயில்வாகனன்கூறுகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழக மீனவர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்துள்ள பாஜ அரசாவது தமிழக மீனவர்களுக்கு நன்மை செய்யும் என எதிர்ப்பார்த்து இருந்தோம். ஆனால் பாஜ அரசும், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லை என்று கூறி உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.முதல் நாளிலேயே சேதம் அடைந்தது