திருமணத்தை எதிர்த்த வாலிபர் திடீர் மாயம்
ஆவடிஆவடி அடுத்த வெள்ளானூர் 6வது தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தினேஷ் (28). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்தனர். தினேஷ் திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி பெற்றோர் பல இடங்களில் பெண் பார்த்தனர். இதில் மனமுடைந்த தினேஷ் கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் தெரியவில்லை. இது பற்றி அவரது தாயார் ரமணி ஆவடி டேங்க் பேட்டரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.