12 வயது மாணவி பாலியல் பலாத்காரம்
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் துலுக்கானூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மாணவியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வீரபத்திரன் (34), பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி மாணவியை பைக்கில் ஆத்தூருக்கு அழைத்து வந்தார். பின்னர் டாஸ்மாக்கில் மது வாங்கிய அவர், பைக்கில் மாணவியுடன் ஊர் திரும்பினார். துலுக்கானூர் அருகே முட்புதர் பகுதியில் பைக்கை நிறுத்தி மது அருந்தினார். மாணவியை மிரட்டி அவளது வாயில் மதுவை ஊற்றினார். மயங்கிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வீரபத்திரனை கைது செய்தனர். கூலித் தொழிலாளியான வீரபத்திரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.