அஜீத் படத்தில் சமந்தாவுக்கு கைமாறும் வாய்ப்பு
சென்னை:தமன்னாவை இயக்கிய இயக்குனர் தனது அடுத்த படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்ய உள்ளார்.விஜய் நடிக்கும் ‘கத்தி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. ‘நான் ஈ' படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு தமிழில் வெற்றிபடம் அமையவில்லை. இதனால் கோலிவுட்டில் வெற்றி படம் தர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். இந்நிலையில்தான் ‘அஞ்சான்' படத்தில் சூர்யா ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
‘வீரம்' படத்தில் அஜீத்தை இயக்கிய ‘சிறுத்தை' சிவா மீண்டும் அஜீத்துடன் இணைய உள்ளார். இயக்குனர் சிவாவுக்கு மிகவும் பிடித்த நடிகை தமன்னா. அதனால்தான் ‘சிறுத்தை‘, ‘வீரம்‘ இரண்டு படங்களிலும் அவரையே ஹீரோயினாக நடிக்க வைத்தார். தற்போது தமன்னாவுக்கு சீசன் டல்லடிக்கிறது. அவர் நடித்த இந்தி படங்கள் ஹிட் ஆகவில்லை. டோலிவுட்டிலும் சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில் தமன்னாவுக்கு பதிலாக தனது அடுத்து படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ‘கத்தி'யில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கும் சமந்தா விரைவில் அஜீத்துடனும் ஜோடி சேருவார் என எதிர்பார்க்கலாம்.