கலகலப்பு பார்ட் 2 கைவிரிக்கும் இயக்குனர்
சென்னை: ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் 2ம் பாகத்தை உருவாக்குவது கோலிவுட்டில் பெருகிவருகிறது. விஸ்வரூபம் ஹிட் ஆனதும் ‘விஸ்வரூபம் 2 உருவாகி வருகிறது. லாரன்ஸ் நடித்த முனி அதன் 2ம்பாகமாக ‘காஞ்சனா உருவானது. அது ஹிட்டானதை தொடர்ந்து தற்போது ‘முனி 3ம் பாகம் இயக்கி வருகிறார். பீட்சா ஹிட்டானது அதன் 2ம்பாகமாக ‘தி வில்லா உருவானது. விஜய் ஆண்டனி நடித்த ‘நான் ஹிட்டானதால் அதன் 2ம்பாகமாக ‘சலீம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘யாமிருக்க பயமே வெற்றி பெற்றதையடுத்து 2ம் பாகம் இயக்க பேச்சு நடக்கிறது. இந்தபாணியில் விமல், சிவா, சந்தானம், ஓவியா, அஞ்சலி என நட்சத்திர பட்டாளம் நடித்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இப்படம் ஹிட் ஆனதையடுத்து இதன் 2ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி சுந்தர் சி கூறும்போது, ‘தற்போது இயக்கி வரும் அரண்மனை படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளேன். ஆனால், கலகலப்பு 2ம் பாகத்தை உருவாக்கும் பணி எதிலும் நான் தற்போது ஈடுபடவில்லை என்றார்.