தம்பதி சண்டையை தடுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
புழல்: கணவன், மனைவி சண்டையை தடுத்த பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. சென்னை செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த தம்பதி தனபால் (35), சாந்தி (35).இவர்களுக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த சாந்தியின் அக்கா சுந்தரி, தகராறை தடுத்துள்ளார். இதில் கோபம் அடைந்த தனபால், சுந்தரியை சரமாரி கத்தியால் குத்திவிட்டார். ரத்தம் கொட்டிய நிலையில் சுந்தரி மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய தனபாலை ஊர் மக்கள் பிடித்து வைத்து சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தனபாலை கைது செய்தனர். சுந்தரியை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.