பலாத்காரம் செய்து பெண் கொலை ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன் கைதான கள்ளக்காதலன் வாக்குமூலம்
ஆத்தூர்: வீரகனூர் அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீரகனூர் அருகேயுள்ள புளியங்குறிச்சியைச் சேர்ந்தவர் தாண்டவன் (50). இவரது மனைவி காசியம்மாள் (45). கடந்த 25ம் தேதி மாலை மாட்டுக்கு புல் அறுக்கச் சென்ற காசியம்மாள், சங்கரன் என்பவரின் தோட்டத்தில் அலங்கோலமான நிலையில் சடலமாக கிடந்தார். இதுபற்றி வீரகனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனிடையே, சந்தேகத்தின் பேரில் தோட்ட உரிமையாளர் சங்கரன்(60) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் காசியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவதுகாசியம்மாள் எனது தோட்டத்திற்கு புல் அறுக்க வரும்போது, எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. எனது தோட்டத்திற்கு 25ம் தேதி புல் அறுக்க காசியம்மாள் வந்தபோது, இருவரும் உல்லாசமாக இருந்தோம். இரண்டாவது முறை அழைத்தபோது அவர் மறுத்து, என்னை அலட்சியப்படுத்தினார். இதனால் கோபமடைந்து அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் மூச்சு திணறி இறந்தார். இவ்வாறு சங்கரன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சங்கரனை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.