மத்திய
அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு
கழகத்தின் டெல்லி மற்றும் டேராடூன் கிளைகளில் டிரில்லிங், எலக்ட்ரானிக்ஸ்,
எலக்ட்ரிக்கல், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், டிரான்ஸ்போர்ட், ஜியோ
பிசிக்ஸ், ஜியாலஜி, வேதியியல், நிதி, மனிதவளம், ஸ்டெனோகிராபி மற்றும்
தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் காலியாக உள்ள 105
பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரம்:
I.டேராடூனில் உள்ள பணியிடங்கள்
1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (புவி இயற்பியல் - பரப்பு) (நிலை - 3): 2 இடங்கள் (பொது).
தகுதி: புவி இயற்பியல் அல்லது இயற்பியல் பாடங்களில் முதுநிலை பட்டம். பட்டப்படிப்பில் வேதியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (நிலை - 3) (வேதியியல்): 2 இடங்கள் (பொது)
தகுதி: வேதியியல் பாடத்தில் முதுநிலை பட்டம். 3. அசிஸ்டென்ட் ரிக்மேன்: (டிரில்லிங்). 4 இடங்கள் (பொது)
தகுதி: மெக்கானிக்கல்/ பெட்ரோலியம் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.
4. அசிஸ்டென்ட் டெக்னீசியன் (எலக்ட்ரிக்கல்): 2 இடங்கள் (பொது)
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில 3 ஆண்டு டிப்ளமோ. 5. அசிஸ்டென்ட் கிரேடு - III (போக்குவரத்து): 2 இடங்கள் (பொது)
தகுதி: ஆட்டோமொபைல்ஸ்/
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது நிர்வாகம்/
வணிக மேலாண்மை பாடங்களில் முதுநிலை டிப்ளமோ அல்லது முதுநிலை பட்டம். கனரக
வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். 6. அசிஸ்டென்ட் கிரேடு - III (மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்): 2 இடங்கள் (பொது)
தகுதி:
மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்/ இன்வென்டரி/ ஸ்டாக் கன்ட்ரோல் ஆகிய
பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது மெட்டீரியல்ஸ்
மேனேஜ்மென்ட் பாடத்தில் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ.
7. அசிஸ்டென்ட் கிரேடு - III (அக்கவுன்ட்ஸ்): 3 இடங்கள் (பொது)
தகுதி: எம்.காம் அல்லது நிதி மற்றும் அக்கவுன்ட்சில் ஓராண்டு டிப்ளமோவுடன் பி.காம் அல்லது ஐசிடபிள்யூஏ / சிஏ இன்டர் தேர்ச்சி.
1. அசிஸ்டென்ட் கிரேடு - 3 (பி அண்ட் ஏ): 10 இடங்கள் (பொது - 7, ஒபிசி - 2, எஸ்சி - 1).
தகுதி: தொழிலாளர்
நலன்/ தொழில் உறவுகள்/ பர்சனல் மேனேஜ்மென்ட்/வணிக நிர்வாகம் ஆகிய
பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம் அல்லது பர்சனல் மற்றும்
அட்மினிஸ்டிரேசன் ஆகிய பாடங்களில் 2 ஆண்டு டிப்ளமோவுடன் ஏதேனும் ஒரு
பட்டப்படிப்பு.
2. அசிஸ்டென்ட் கிரேடு - 3 (மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்): 2 இடங்கள் (பொது).
தகுதி: மெட்டீரியல்ஸ்
மேனேஜ்மென்ட்/ இன்வென்டரி/ ஸ்டாக் கன்ட்ரோல் ஆகிய பாடங்களில் 3 ஆண்டு
டிப்ளமோ அல்லது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பாடத்தில் ஓராண்டு முதுநிலை
டிப்ளமோ.
3. அசிஸ்டென்ட் கிரேடு - 3 (டிரான்ஸ்போர்ட்): 1 இடம் (பொது)
தகுதி: ஆட்டோ
மொபைல்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது
வணிக நிர்வாகம் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது முதுநிலை பட்டம். கனரக
வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். 5. ஜூனியர் அசிஸ்டென்ட் (ஸ்டெனோ ஆங்கிலம்): 24 இடங்கள் (பொது - 12, ஒபிசி - 6, எஸ்சி - 4, எஸ்டி - 2).
தகுதி: ஏதேனும்
ஒரு டிகிரியுடன் டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும்
திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80
வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கம்ப்யூட்டர்
பாடத்தில் 6 மாத டிப்ளமோ படிப்பு.
வயது:
ஜூனியர்
பயர்மேன் தவிர மற்ற பணிகளுக்கு 27.6.2025 அன்று பொதுப் பிரிவினருக்கு 18
முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 18 முதல் 33க்குள். எஸ்சி., எஸ்டி
பிரிவினருக்கு 18 முதல் 35க்குள். ஜூனியர் பயர்மேன் பணிக்கு 18 முதல் 27
வயதுக்குள்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில்
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு புதுடெல்லி,
டேராடூன், ஹால்ட்வானி ஆகிய மையங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவினர்
மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.300. (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.100).
இதை டேராடூன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள ஒஎன்ஜிசி பவர் ஜோதி
அக்கவுன்ட் எண்: 30827318409 என்ற கணக்கில் செலுத்தவும்.
விண்ணப்பதாரர்கள் www.ongcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.