வயலுக்கு சென்றபோது பாம்பு கடித்து பெண் பலி
பள்ளிப்பட்டு: தண்ணீர் பாய்ச்ச சென்ற பெண், பாம்பு கடித்து இறந்தார்.ஆர்கே.பேட்டை அடுத்த ஸ்ரீவிலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மனைவி உஷா (42). அந்த பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற உஷாவை பாம்பு கடித்துவிட்டது. மயங்கி விழுந்த அவரை, பக்கத்து தோட்டத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உஷா பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி ஆர்கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.