பட்டாபிராம் வாலிபர் கொலையில் நண்பர்கள் கைது
ஆவடி: பட்டாபிராம் வாலிபர் கொலையில் அவரது நண்பர்கள் 4 பேர் பிடிபட்டனர்.ஆவடி பட்டாபிராம் லால்பகதூர் சாஸ்திரி நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அரிகுமார். இவரது மகன் பிரதீஸ் (21). இவர் நேற்று முன்தினம் பட்டாபிராம் கக்கன்ஜி நகர் அருகிலுள்ள ராணுவ துறைக்கு சொந்தமான காலி மைதானத்தில் உள்ள முட்புதரில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியை சேர்ந்த மகேசுக்கும் (27), பிரதீசுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரதீசை வெட்டி கொன்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், பட்டாபிராம் சாஸ்திரி நகரை சேர்ந்த மகேஷ் (27), அவரது நண்பர்கள் விஷால் (20), பாஸ்கரன் (19), சரவணன் (19) ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். பிரதீஸ் கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.