பாலியல் தொழிலுக்கு இன்டர்நெட்டில் அழைப்பு புரோக்கர்கள் சிக்கினர் 7 இளம்பெண்கள் மீட்பு
சென்னை: இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து பாலியல் தொழில் செய்த 4 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். 7 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடந்து வருவதாகவும், இணைய தளம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பாலியல் தொழில் நடந்து வருவதாகவும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்படி, பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். நெசப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்தபோது, பாண்டியன் (41) என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாண்டியன் 5 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். இவர் மீது 12 பாலியல் குற்ற வழக்குகள் உள்ளன.இதேபோல், தி.நகர் போலீசார் நடத்திய சோதனையில் மாங்காடு ஜெகதீஸ்பாபு (24), குரோம்பேட்டை பாலசுந்தர்ராஜ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார். போரூரில் நடந்த சோதனையில் வளசரவாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் (40) கைது செய்யப்பட்டார். அங்கிருந்த ஆந்திர இளம் பெண்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து அடுக்குமாடி குடியிருப்பில் ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.