பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு நள்ளிரவில் கைவரிசை
ஆவடி: வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய பெண் செயினை பறி கொடுத்தார்.அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் ஜெகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் கேசவதாஸ் (28). மனைவி மேகலா (23). இவர்கள் நேற்றிரவு கதவை திறந்து வைத்து வீட்டில் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் வந்த மர்ம நபர், தூங்கிக்கொண்டு இருந்த மேகலாவிடம் இருந்து 3 பவுன் செயினை அறுத்துள்ளார். திடுக்கிட்டு எழுந்த மேகலா, சத்தம் போட்டுள்ளார். ஆனால் மர்ம நபர், செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி விட்டார்.புகாரின்படி, அம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.