புழல்:கொளத்தூர் சன்னதி தெருவில் பழமைவாய்ந்த அருள்மிகு அமுதாம்பிகை சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 31ம் தேதி முதல் கிராம தேவதை வழிபாடு நடந்து வருகிறது.
இன்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றினார். இதில் கொளத்தூர், ரெட்டேரி, பூம்புகார் நகர், அகரம், பெரவள்ளூர், பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கண்டுகளித்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று காலையில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் விசேஷ வாத்தியங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.