சத்தமில்லாமல் இரவில் வெளியான அஜீத் பாடல்
சென்னை:தடபுடல் விழா, ஆடம்பர ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் இரவில் அஜீத் பட ஆடியோவை வெளியிட்டார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பு புரமோஷன் என்ற பெயரில் பல்வேறு விழாக் களை நடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்துகின்றனர். ஆனால் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படத்தின் ஆடியோ எந்த தடபுடல் ஏற்பாடுகளும் இல்லாமல் அமைதியாக நேற்று முன்தினம் இரவில் வெளியிடப்பட்டது. சிறிது நேரத்திலேயே விற்பனை சூடுபறக்க தொடங்கிவிட்டதாம். யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி இயக்குனர் விஷ்ணுவர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்த அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ பாடல் வெளியாகிவிட்டது. யுவனுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.