Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
31
Aug
கிளிப்பிங்ஸ்


ஸ்பெஷல் ஷோ

அஜீத் நடித்த ‘மங்காத்தா‘ கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியாகி 2 வருடம் ஆனதையொட்டி தூத்துக்குடியில் உள்ள தியேட்டரில் இன்று காலை சிறப்பு காட்சி திரையிட்டனர். அஜீத் ரசிகர்களும், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடு செய்தனர். இதில் வசூலாகும் தொகையை பார்வையற்றோர் நல்வாழ்வுக்காக அளிக்கின்றனர்.    

ஹீரோ வைத்த விருந்து

சிவகார்த்திகேயன்&மனைவி ஆர்த்தி திருமண ஆண்டு விழா கொண்டாடினார்கள். இதையொட்டி நண்பர் தனுஷுக்கு விருந்து அளித்தார் சிவ கார்த்திகேயன். இதுபற்றி தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தனுஷ் விருந்தை பாராட்டியதுடன், ஜோடிக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்கருக்கு எஸ்.பி.பி. படம்

மும்பையில் உள்ள இந்தி திரைப்பட சம்மேளனம், தெலுங்கு திரைப்பட சங்கம் இணைந்து தணிகல பரணி இயக்கிய ‘மிதுனம் படத்தை ஆஸ்கார் போட்டிக்கான இந்திய படங்களின் பட்டியலில் இடம்பிடிக்க தேர்வு செய்துள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரணியம், லட்சுமி நடித்துள்ளனர்.

ஐடி கதையில் ஆண்ட்ரியா

‘கற்றது தமிழ் படத்தையடுத்து ராம் இயக்கிய நடித்துள்ள ‘தங்க மீன்கள் திரைக்கு வந்துள்ளது. 2 வருடத்துக்கும் மேல் இப்படம் முடங்கி இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இறுதியாக படம் ரிலீஸ் ஆனதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ராம். அடுத்து என்ன படம் என்றதும், ‘தரமணி உருவாக்கப்போகிறேன் என்றார். ஐடி பீல்ட் பற்றிய மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாகும் இதில் ஆண்ட்ரியா, புதுமுகம் வசந்த் ரவி நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran