தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்கா சுதர்சன நாச்சியப்பன் தகவல்
மீனம்பாக்கம்: மதுரையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும்போது இது பற்றி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு புதிய தொழில் பூங்காங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி உள்பட தென்மாவட்ட வளர்ச்சிக்காக 100 முதல் 150 கி.மீ. சுற்றளவை உள்ளடக்கி புதிய தொழிற்பூங்கா அமைக்க திட்டமிட்டு ஆய்வு பணி நடந்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமும் பேசி கொண்டிருக்கிறோம். தமிழக அரசும் நிலங் களை கையகப்படுத்தி கொடுக்கும் என்று நம்புகிறோம். தமிழக அரசையும் ஒரு பங்குதாரராக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை உள்ளடக்கி மற்றொரு தொழில் பூங்கா அமைக்கும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது.