Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
15
Aug
தீய பழக்கங்கள் துன்பத்தையே தரும்


காசு, பணம், துட்டு இல்லாவிட்டால் ரத்த உறவுகள் கூட இந்தக் காலத்தில் மதிப்பதில்லை. பணத்தை பார்த்துவிட்டால் தந்தை-மகன் உறவு கூட அறுந்துவிடுகிறது. பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்த மகனை கண்டித்த தந்தை, இப்படி செலவழிப்பதை நிறுத்தாவிட்டால், சொத்து முழுவதையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிடுவேன் என கூறியிருக்கிறார். இதனால் பயந¢துபோன மகன், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

பஸ் நிலையம் உள்பட நகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் டீ கடைகள் நடத்தி வந்தார். கோவிந்தராஜின் மகன் வேலுமணி. இவருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளக்காதலிக்கு பணத்தை வேலுமணி தாராளமாக செலவு செய்தார். சொத்துகளை விற்றும் செலவு செய்தார். மனமுடைந்த கோவிந்தராஜ், அவரை  கண்டித்தார். ஆனால், வேலுமணி கேட்கவில்லை. ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், ‘கள்ளக்காதலை துண்டிக்க மறுத்தால் சொத்துகள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிடுவேன்‘Õ என தெரிவித்துள்ளார்.

தந்தையை உயிரோடுவிட்டால் ஆசிரமத்துக்கு சொத்துக்களை எழுதி வைத்துவிடுவார் என கருதிய வேலுமணி, அவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று இரவு 9.30 மணிக்கு தந்தை கோவிந்தராஜை, வேலுமணி சந்தித்தார். பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக்கூறி காரில் அழைத்துச்சென்றார். அப்போது, காரில் டிரைவர் ஜெயக்குமார், வேலுமணியின் நண்பர்களான மணிகண்டன், திருப்பதி ஆகியோரும் இருந்துள்ளனர். கார் போய் கொண்டிருந்த போது, திடீரென வேலுமணி உள்பட 3 பேர் கோவிந்தராஜை இறுக பிடித்துக்கொள்ள, திருப்பதி கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

ஆனால் ஒன்றும் தெரியாததுபோல் தந்தையின் உடலை பார்க்க காரில் வந்தார். போலீசாரை ஏமாற்றும் நோக்கத்தில் நீண்ட நேரம் கதறி அழுதபடி இருந்துள்ளார். ஆனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேலுமணியின் காரில் முன்சீட்டில் ரத்தக்கறை படிந்திருந்தது. சந்தேகமடைந்த போலீசார், முதலில் வேலுமணியின் நண்பர்களை பிடித்து விசாரித்தனர். பின்பு வேலுமணியிடம் விசாரணை நடத்தியதில், கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பெற்று வளர்த்த தந்தையை விட கள்ளக் காதலி முக்கியமாக போய் விட்டார் அந்த மகனுக்கு. கண்ணை மறைத்து விட்ட கள்ளக் காதல் ஆசையால் தந்தையை துடிக்க துடிக்க கொன்றிருக்கிறார் மகன். மது, மாது, சூது போன்ற தீய பழக்கங்கள் துன்பத்தையே தரும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran