சூர்யா நடித்த ‘மாற்றான் படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். தனது படங்களில் மெலடி பாடல்களையே விரும்பும் கே.வி.ஆனந்த் இப்படத்துக்கு பக்கா குத்து பாட்டு வேண்டும் என்று ஹாரிஸிடம் சொன்னார். ‘இந்த பாடலில் எந்த இடத்திலும் மெலடி இசையை மிக்ஸ் செய்யக்கூடாது என்று ஹாரிசிடம் கண்டிஷனும் போட்டிருக்கிறார். இயக்குனர் விருப்பத்தை ஷாக்குடன் நிறைவேற்றி இருக்கிறார் ஹாரிஸ். ................................................................................................... காயம் பட்ட கமல்
‘விஸ்வரூபம் 2 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் கமல் ஸ்டன்ட் காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார். தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். புதிய படமொன்றின் பாடல் பதிவுக்காக லண்டன் சென்றிருக்கும் இளையராஜா முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் பங்கேற்க வேண்டும் என்று கமலிடம் கேட்டார். ‘விஸ்வரூபம் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இளையராஜாவுடன் பேசிய கமல், ஷூட்டிங்கின்போது காயம் அடைந்திருந்தாலும் இளையராஜாவின் இசை எந்த காயத்தையும் ஆற்றிவிடும் என்பதால் காயத்தை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பதில் அளித்தார். ................................................................................................... தலைப்பு ரெடி
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த படத்துக்கு டைட்டில் வைக்காமலே ஷூட்டிங் தொடங்கியது. ஒரு வருடம் ஷூட்டிங் நடந்து முடிந்தபிறகே ‘ஆரம்பம் எனப் பெயரிடப்பட்டது. இதேபோல் ‘சிறுத்தை‘ சிவா இயக்கும் படத்தில் அஜீத், தமன்னா நடிக்கும் படத்துக்கும் டைட்டில் வைக்காமல் ஷூட்டிங் தொடங்கியது. ‘விநாயகம் பிரதர்ஸ் என பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படத்துக்கு ‘வீரம் என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ................................................................................................... மேடம் சில்க்
சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் வித்யா பாலன், வீணா மாலிக், சனா கான் போன்றவர்கள் நடித்தனர். இவர்கள் எல்லோருமே சில்க் வேடத்தில் நடித்தது பற்றி சந்தோஷத்தை வெளிப்படுத்தினாலும் சில்க் சாயலில் இவர்கள் இல்லை. சில்க் சாயலிலேயே இருக்கும் பிந்து மாதவியிடம் சாயல் ஒற்றுமை பற்றி கேட்டால், ‘சில்க் மேடம் இண்டஸ்ட்ரியில் சாதிச்சிருக்காங்க. அவர் சாயல்ல இருக்க¤றதா என்னைய சொல்றது சந்தோஷம்னு முத்துப்பல் காட்டி சிரிக்கிறாராம்.