மேட்டூர் நீர் மட்டம் 2 அடி குறைந்தது
மேட்டூர்:கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரமாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை 14,539 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,072 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 18,765 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து குறைவாக உள்ள நிலையில் அதிகமாக நீர் பாசனத்துக்கு திறக்கப்படுவதால் 3 நாட்களில் நீர் மட்டம் 2 அடி குறைந்துள்ளது.