ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளர் ஆகிறார். ஒய்.எம். மூவிஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி இருக்கும் அவர் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இந்தி படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தின் இயக்குனர், ஸ்கிரிப்ட், நடிகர், நடிகை தேர்வு போன்றவை இனிதான் தொடங்க உள்ளதாம். படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பை அவரே ஏற்கிறார்.
20 ஆண்டுக்கு பிறகு ரீமேக்
விஜயகாந்த் நடித்த ஆபாவாணனின் படம் ‘செந்தூரப்பூவே. தேவராஜ் இயக்கிய இப்படத்தில் ராம்கி, நிரோஷா நடித்திருந்தனர். 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப ஸ்கிரிப்டை மாற்றி இதை தயாரிக்க உள்ளனர். டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
ரீ என்ட்ரி ஜாக்பாட்
வில்லன் வேடத்திலிருந்து ஹீரோவாக நடித்த சத்யராஜ் ‘நண்பன்‘ படத்தில் கல்லூரி பேராசிரியராக குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்பிறகு இவருக்கு ஜாக்பாட் தொடங்கி விட்டது. அடுத்து தெலுங்கில் ‘மிர்ச்சி‘ என்ற படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்றார். தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ இந்தி படத்தில் நடித்திருக்கிறார். வில்லன், ஹீரோவாக நடித்தபோது லட்சங்களில் வாங்கிய சம்பளத்தைவிட இப்போது அதிகமாக கொட்டித்தருகிறார்களாம்.
செல்வாவின் பயம்
ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள ‘இரண்டாம் உலகம் படத்தை முடித்துவிட்டார் செல்வராகவன். அடுத்து 2 தெலுங்கு படம், ஒரு இந்தி படம் இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே தெலுங்கு படங்களில் பணியாற்றிய செல்வாவுக்கு இந்தி பீல்டு புதுக்களமாக அமைந்திருக்கிறது. இது அவருக்கு பழக்கமில்லாத களம். எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்று லேசான பயம் மனதை வாட்டுகிறதாம்.