14வது உலக தடகள சாம்பியன்ஸ்ஷிப் போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வருகிறது. நேற்று ஆண்களுக்கான வட்டு எறிதல் தகுதி சுற்று போட்டி நடந்தது. மொத்தம் 30 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவின் விகாஸ் கவுடா 63.64 மீட்டர் தூரம் வீசி 7வது இடம் பிடித்து இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார். விகாஸ்கவுடாவின் சிறப்பான வட்டு எறிதல் தூரம் 66.28 மீட்டர் ஆகும். 12 பேர் பங்கேற்கும் இறுதிபோட்டி இன்று நடக்கிறது. ஜெர்மனியின் ராபர்ட் ஹார்டிங், போலந்தின் பியோர் மலாசோஸ்கி, எஸ்டோனியாவின் கான்டெர் ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள்.