Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
12
Aug
லாஜிக் படங்களை இயக்க நான் மேதாவி கிடையாது பிரபு தேவா பேட்டி


சென்னை:லாஜிக் உள்ள புத்திசாலித்தனமான படங்களை இயக்க நான் மேதாவி கிடையாது என்றார் பிரபுதேவா.இது குறித்து அவர் அளித்த பேட்டி:சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நன்றாக நடனம் ஆடும் ஹீரோக்கள் பெயரை சொல்லும்போது விஜய் பெயரை சொல்லாதது ஏன்? என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். விஜய் பெயரை சொன்னேனா இல்லையா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் விஜய்யும் நானும் நல்ல உறவுடன் இருக்கிறோம். என்னைப்பற்றி அவருக்கு நன்றாக தெரியும். இதுபோன்ற விஷயங்கள் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.

நான் நடனம் அமைப்பதை குறைத்துக்கொண்டதற்கு இயக்குனர் பணி சுமைதான் காரணம். பாலிவுட்டில் நான் இயக்கும் படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. ஆனால் விமர்சனம் செய்பவர்கள் சாடுகிறார்கள். நான் இயக்கிய ‘ரவுடி ரத்தோர் (சிறுத்தை பட ரீமேக்) படத்துக்கு ஒரு ஸ்டார்தான் வழங்கினார்கள். ஆனால் தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. விமர்சகர், தயாரிப்பாளர் யாருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்? விமர்சகர்கள் பார்வையில் அவர்கள் கருத்து சரியாக இருக்கலாம் ஆனால் லாஜிக் உள்ள புத்திசாலித்தனமான படங்களாகவே இயக்குவதற்கு நான் ஒன்றும் மேதாவி இல்லை.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran