திருமண விளம்பரம்: நயன்தாரா கோபமா? இயக்குனர் விளக்கம்
சென்னை:படத்துக்காக தரப்பட்ட விளம்பரத்தை பார்த¢து நயன்தாரா கோபப்பட்டாரா என்பதற்கு பத¤ல் அளித்தார் இயக்குனர் அட்லீ.
ஆர்யா, நயன்தாரா நடிக்கும் படம் ராஜா ராணி. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும்போது, ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என விளம்பரத்தில் போட்டு, குறிப்பிட்ட தேதி போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் ஆர்யாவும் நயன்தாராவும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற படங்களும் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் படப் பெயரோ, படம் சம்பந¢தமான எந்த தகவலோ இல்லை. இதனால் இந்த விளம்பரத்தை பார்த்து நயன்தாரா கோபப்பட்டதாக தகவல் பரவியது.
இது குறித்து இயக்குனர் அட்லீ கூறியதாவது:
ராஜா ராணி படத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் தம¢பதியாக நடித்துள்ளனர். முதல் காட்சியே இவர்களின் திருமண காட்ச¤தான். அதனால்தான் பட ஷூட்டிங் தொடங்கும்போது அதுபோல் விளம்பரம் செய்தோம். இந்த விளம்பரம் பற்றி நயன்தாராவுக்கு தெரியவந்தபோது, அவரிடம், இது நல்ல ரீச் ஆகும் என விளக்கினேன். அவரும் நல்ல ஐடியா என பாராட்டினார். அதற்குள் இந்த விளம்பரம் பார்த்து நயன்தாரா டென்ஷன் ஆனதாகவும் அவருக்கு இது பிடிக்கவில்லை என்றும் பரப்பிவிட்டார்கள். அப்படி எதுவுமே இல்லை. இந்த படத்த¤ல் ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் உள்பட பலர் நடித்துள்ளனர்.