எய்ட்ஸ் பற்றிய தவறான பயம் எல்லோருக்கும் இருக்கிறது. பெற்றோருக்கு அந்த நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக இருக்கும் என சொல்ல முடியாது. ஆனால் பலருக்கு பயம். இருந்தால் நம் வாழ்க்கையும் பாதியில் முடிந்து விடுமே என நினைக்கிறார்கள். எய்ட்ஸ் நோயால் பெற்றோர் இறந்து போனதால், நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்திருக்கிறார் மாப்பிள்ளை. அவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார்.
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் அன்புச்செல்வி. இவருக¢கும் சூடனிப்பட்டியை சேர்ந்த சேவுகன் என்பவருக¢கும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 19ல் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அன்புச்செல்வியின் பெற்றோர் திடீரென இறந்து விட்டனர். இவர்கள் எய்ட்ஸ் நோயால் இறந்ததாக மாப்பிள்ளை வீட்டாரிடம் சிலர் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய சேவுகன், அன்புச்செல்வியை திருமணம் செய்ய மறுத்தார். ஒருநாள் அன்புச்செல்வியும், அவரது தம்பியும் திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அங்கு வந்த சேவுகன், அவரது அண்ணன் பெரியண்ணண், அண்ணி அழகம்மாள் ஆகியோர் அன்புச்செல்வியை பார்த்து, ‘உனக்கும் எய்ட்ஸ் நோய் இருக்கலாம்.
எனவே உன்னை திருமணம் செய்ய முடியாது. மீறி திருமணம் செய்ய முயற்சித்தால், உன்னை கொலை செய்துவிடுவோம்‘ என்று மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அன்புச்செல்வி புகார் கொடுத்தார். சேவுகன் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இரு தரப்பினரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். அப்போது அன்புச்செல்வி தனக¢கு எய்ட்ஸ் நோய் இல்லை என மருத்துவ சான்றிதழ் அளித்தார். இதனையடுத்து, சேவுகன் மற்றும் பெரியண்ணன், அழகம்மாள் மீது வழக¢குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.
எய்ட்ஸ் நோய் தொற்றுநோயல்ல. உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். திருமணத்துக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்து எய்ட்ஸ் இல்லை என தெரிந்தால்தான் திருமணம் செய்வேன் என மாப்பிள்ளை கூறலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பெற்றோர் இறந்ததை காரணம் காட்டி திருமணத்துக்கு மறுக்க முடியாது. அதை சட்டம் அனுமதிக்காது. அந்தப் பெண்ணை திருமணம் செய்தால் வெளியே இருக்கலாம். இல்லாவிட்டால் சிறையில் கம்பி எண்ண வேண்டியதுதான்.