வத்தலக்குண்டுவில் நள்ளிரவு இந்து முன்னணி தலைவர் வீட்டின் மீது கல்வீச்சு
வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கன்னிமார் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் இந்து முன்னணி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் இவர் வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.
சத்தம் கேட்டு வேலுசாமி மற்றும் குடும்பத்தினர் எழுந்து வந்து பார்த்தனர். முன்னதாக வீட்டில் இருந்த நாயும் குரைத்தது. இதனால் கல்வீசிய நபர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வேலுசாமி வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். சமீப காலமாக இந்து முன்னணி, பா.ஜ. பிரமுகர்கள் மீது தாக்குதல் நடந்து வருவதால், வேலுசாமி வீட்டின் மீது கல்வீசியவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.