ஆசஷ் 4வது டெஸ்ட் இங்கிலாந்து 238/9
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆசஷ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடரை தக்கவைத்ததுடன் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலைவகிக்கிறது. இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி செஸ்டர் லீ ஸ்டீரிட் நகரில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே ஆஸி. பந்து வீச்சில் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது. சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. ரூட் 34, டிரோட் 49, பீட்டர்சன் 26, குக் 51, இயான் பெல் 6, பிரையர் 17, பேர்ஸ்டவ் 14, கிறிஸ் பிராடு 3, ஸ்வான் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. ஆஸி. தரப்பில் நாதன் லியான் 4, ஹாரிஸ் 2, பேர்டு, வாட்சன், சிடில் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். பெர்சனன் 12, ஆண்டர்சன் 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.