ஹாலிவுட் வாய்ப்பு தருவதாக நீது சந்திராவிடம் மோசடி
சென்னை: ஹாலிவுட் இயக்குனர் என்று சொல்லி, நீது சந்திராவிடம் இணையதளம் மூலம் இன்டர்வியூ நடத்திய போலி நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளின் பெயரில் இணைய தளங்களில் போலியாக டுவிட்டர், பேஸ் புக் பக்கங்கள் உருவாக்கி அதில் நடிகர், நடிகைகள் கூறியது போல் தவறான தகவல்கள் வெளியிடுவதும் அதை சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் மறுப்பதும் நடந்து வருகிறது. இந்நிலையில் நீது சந்திராவிடம் ஹாலிவுட் பட வாய்ப்பு தருவதாக கூறி அவரை இணைய தளம் மூலம் நேர்முக தேர்வுக்கு அழைத்து மோசடி செய்த சம்பவம் வெளியாகி உள்ளது.
‘ஆதி பகவன்Õ, ‘தீராத விளையாட்டு பிள்ளைÕ போன்ற படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவருக்கு ஹாலிவுட் இயக்குனர் ஜோ ஜான்சன் என்பவரிடம் இருந்து ‘ஐலேண்ட் ஆப் தி ப்ளூ டால்பின்ஸ்Õ என்ற படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதை ஏற்று இணைய தளத்தில் ‘ஸ்கைப்Õ வசதி மூலம் இன்டர்வியூவில் பங்கேற்றார். பின்னர் அவர் தேர்வு செயய்யப்பட்டதாக இயக்குனர் தெரிவித்தார். இதனால் நீது மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் நீதுவிடம் ஸ்கைப் மூலம் இன்டர்வியூ நடத்தவில்லை என்று ஹாலிவுட் இயக்குனர் ஜோ ஜான்சன் தரப்பு மறுத்துள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘ஐலேண்ட் ஆப் தி ப்ளூ டால்பின்ஸ்Õ என்ற பெயரில் இயக்குனர் ஜோ எந்த படத்தையும் இயக்கவில்லை. இயக்குனரின் பெயரை தவறாக பயன்படுத்தி நீது சந்திராவிடம் போலியாக யாரோ பேசி உள்ளனர். இந்தியாவில் இருந்து நடிக்க விரும்பும் இளம்பெண்கள் முறைப்படி இயக்குனரின் ஏஜென்சியை தொடர்பு கொண்டு அவர்களிடம் இதுபற்றி விசாரிக்கலாம். போலியானவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம்Õ என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.