மின்வாரிய ஊர்தி ஓட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்
செங்கல்பட்டு:தமிழ்நாடு மின்வாரிய ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு திம்மாவரம் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. திட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் முத்துபாண்டி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சதாசிவம், மாநில பொருளாளர் ராஜா, மாநில பொது செயலாளர் நாகராஜன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள பதவி உயர்வுகளை காலதாமதமின்றி வழங்கிடுதல், மின்வாரியத்தில் இயங்கி கொண்டிருக்கும் பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்குதல், மின்வாரியத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நிரப்புதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.