Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
05
Aug
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வயது 52 நண்பர்களோடு கொண்டாடினார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமா தனது 52வது பிறந்த நாளை நண்பர்களுடன் நேற்று கொண்டாடினார்.உலகின் சக்தி வாய்ந்த தலைவரும், அமெரிக்காவின் அதிபருமான பாரக் ஒபாமாவுக்கு 52 வயதாகிறது. இவரது பிறந்த தினம் நேற்று விடுமுறை நாளான ஞாயிறு அன்று வந்தது. கடந்த வாரம் முதலே அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவியத் தொடங்கின. அவரது மனைவி மிஷல் ஒபாமா, அன்பே, உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் கூறியிருந்தார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியேற்ற சட்ட சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் குறித்து ஒபாமா தலைமையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் சிறுபான்மை துறை தலைவர் நான்சி பெல்லோசி ஒரு பரிசை வழங்கினார். அதில், பிளாக் பாரஸ்ட் கேக்கில் அதிபர் ஒபாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என எழுதப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அல் கய்தாவின் மிரட்டல்களுக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் நேற்று ஒரு நாள் மூடப்பட்டன. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்க ஒபாமா திட்டமிட்டிருந்தார். அந்த பரபரப்பான பணிகளுக்கு நடுவிலும் அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற இடத்தில் அதிபர்கள் ஓய்வெடுக்கும் டேவிட் கேம்ப் என்ற சொகுசு விடுதியில் தனது நண்பர்களுடன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் ஒபாமா. அங்கு நண்பர்களுடன் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.  
சனி, ஞாயிறுகளில் பிறந்த நாளையொட்டி ஹவாய் மற்றும் சிகாகோவில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டார். அதன்பின் வழக்கம் போல ஞாயிறு பகலில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொள்வதற்காக வெள்ளை மாளிகை திரும்பினார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran