திருமயம்:தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த பாப்பாநாடு கிராமத்தை சேர்ந்தவர் வாசு (48). பேராவூரணியில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பெல் ஆலையை திறந்து வைக்க நேற்று பிரதமர் வந்தார். அப்போது ஹெலிபேடு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் வாசு. மதியம் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
வாசுவுக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு இலகுவான பணி ஒதுக்க வேண்டும் என ஏற்கனவே காவல் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பைபாஸ் சர்ஜரி செய்த வாசுவுக்கு பிரதமரின் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பணி ஒதுக்கிய அதிகாரி குறித்தும், பிரதமர் பாதுகாப்பு பணியை ஏற்க வாசு விருப்பம் தெரிவித்தாரா, மறுத்தாரா, கட்டாயமாக பணி ஒதுக்கப்பட்டதா என்று தீவிர விசாரணை நடத்த போலீசாருக்கு டிஐஜி அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.