கோலாலம்பூர்:மலேசியாவில் தெற்கு ஜோகோர் மாகாணத்தில் கடலில் சென்ற படகு கவிழ்ந்து 40 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது பற்றி மலேசிய கடற்படை அதிகாரி அம்ரான் தாவூத் தெரிவிக்கையில் இந்தோனிசியாவைச் சேர்ந்த 40 பேர் படகு மூலமாக மலேசியாவிற்குள் நுழைய நேற்று முன்தினம் இரவு முயன்றுள்ளனர். அப்போது மலேசியாவில் ஜோகோர் அருகே நடுக்கடலில் அவர்களது படகு மூழ்கியது.
இதனையறிந்த கடல்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 15 மணிநேரத்திற்கும் மேலாக தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 4 பேரை மீனவர்களின் உதவியுடன் உயிருடன் மீட்டுள்ளனர். மீதி 40 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.