குடிக்க பணம் தர மறுப்பு பிரியாணி கடைக்காரரை கொல்ல முயன்றவர் கைது
துரைப்பாக்கம்:குடிக்க பணம் தர மறுத்ததால் பிரியாணி கடைக்காரரை குத்திக் கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில்
அடைத்தனர்.சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் இமாயின் (54). நேற்று மதியம் போதையில் கடைக்கு
வந்த ஒரு வாலிபர், இமாயினிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர அவர் மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த வாலிபர், திடீரென மறைத்து
வைத்திருந்த கத்தியால் இமாயின் கழுத்தில் குத்த முயன்றார். பதறிப்போன இமாயின், அலறியபடி ரோட்டுக்கு ஓடி வந்தார். சத்தம் கேட்டு அந்த
வழியாக சென்ற சிலர், வாலிபரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் வந்து, வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் செம்மஞ்சேரி
சுனாமி குடியிருப்பை சேர்ந்த கோபி (31) என தெரிந்தது. இவர் மீது டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ஒன்றரை லட்சம் கொள்ளை அடித்தது,
ரோந்து சென்ற செம்மஞ்சேரி எஸ்ஐ ஜார்ஜை தாக்கியது உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கோபியை போலீசார் கைது செய்து,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.