Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
30
Apr
மல்டி ஹீரோ கதை இயக்க பயம் கரு. பழனியப்பன் பேட்டி


சென்னை: மல்டி ஹீரோ கதை இயக்குவதற்கு பயம் என்றார் டைரக்டர் கரு. பழனியப்பன்.பார்த்திபன் கனவு, சதுரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் தற்போது ‘ஜன்னல் ஓரம்‘ என்ற படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது:
பழனியிலிருந்து புறப்படும் ஒரு பஸ் குறிப்பிட்ட ஒரு ஊரை சென்றடைவதற்குள் அந்த பஸ்சில் உள்ள பயணிகளிடையே நடக்கும் சம்பவங்களே கதை. இந்த படத்தை பார்க்கும்போது சிறுவயதில் பஸ்சில் ஜன்னல் ஓரம் அமர்ந்து சென்ற ஞாபகங்கள் வரும்.

மலையாளத்தில் ‘ஆர்ட¢னரி‘ என்ற பெயரில் வந்த படத்தின் ரீமேக். ‘ரீமேக் படங்கள் இயக்குவது ஏன்?‘ என்கிறார்கள். நல்ல கதைகள் எங்கிருந்தாலும் அதை சொல்ல விரும்புகிறேன். சொல்லப்போனால் எனது எல்லா படங்களுமே ரீமேக்தான். அதையெல்லாம் சொல்லாமல் இயக்கினேன். இப்படத்தை சொல்லிவிட்டு இயக்குகிறேன். மல்டி ஹீரோக்கள் படங்களை நான் இயக்கியதில்லை. காரணம் எனக்கிருந்த பயம்தான். இப்படத்தில் அந்த குறை நீங்கிவிட்டது. பார்த்திபன், விமல், விதார்த், ரமணா என 4 ஹீரோக்கள், பூர்ணா, மனிஷா என 2 ஹீரோயின்களுடன் ராஜேஷ், சிங்கம்புலி என பலர் நடிக்கின்றனர். இசை வித்யாசாகர், ஒளிப்பதிவு அரபிந்து சாரா. தயாரிப்பு மு.ஹேமந்த். இவ்வாறு கரு.பழனியப்பன் கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran