Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
30
Apr
வித்யாபாலன் மீது கருப்பு பூனை பாய்ந்ததால் பரபரப்பு


மும்பை: கருப்பு பூனை பாய்ந்ததால் வித்யாபாலன் அலறினார். அப்செட்டில் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘கஹானி‘ படத்தில் கணவனை ஊர்முழுவதும் தேடும் தைரியமான கர்ப்பிணி கதாபாத்திரம், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான ‘டர்ட்டி பிக்சர்‘ படத்தில் துணிச்சலான கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் வித்யா பாலன். சமீபத்தில் மும்பையில் தனது உறவினர் ஆதித்ய ராய் தயாரித்த ‘ஆஷிகி‘ என்ற படத்தின் சிறப்பு காட்சிக்கு கணவர் சித்தார்த்துடன் சென்றார். தியேட்டருக்குள் நுழைந்து மற்றவர்களிடம் நலம் விசாரித்தபடி சென்ற அவர் மீது திடீரென ஒரு கருப்பு பூனை பாய்ந்தது. அவரது காலடி அருகே குதித்து ஓடியது. இதைக்கண்டு வித்யாபாலன் அலறினார். அவரது அலறல் சத்தம் அங்கிருந்தவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது.

வித்யாபாலன் தெய்வபக்தி, சடங்கு சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். பூனை குறுக்கே பாய்ந்த சம்பவம் அவரை அப்செட் ஆக்கியது. யாரிடமும் பேசாமல் அங்கிருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்தார். அவரை சித்தார்த் சமாதானப்படுத்தினார். ‘பூனை குறுக்கே போனது அபசகுனம். ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா?‘ என்று கணவரிடம் கேட்டபடி இருந்தார். இதனால் படம் பார்க்கும் மூட் இல்லாமல் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran