Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
01
Mar
ஆவடி வேல்டெக் பல்கலையில் கண்காட்சி


திருவள்ளூர்: ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவு மாணவர்களுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் படைப்பு களை காட் சிக்கு வைத்தனர். மேலும் இயற்பியல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பயோகெமிக்கல் உள்ளிட்ட 4 துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரகடம் தேசிய மோட் டார் வாகன ஆராய்ச்சி மைய (நாட்ரிப்) இயக்குநர் பிரதீப் அகர்வால் தொடக்க உரை ஆற்றினார். பல்கலைக்கழக வேந்தர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். துணைவேந்தர்   பாஜ்பாய் வரவேற்றார். சிறந்த படைப்புகளை சமர்ப்பித்தவர்களுக்கு நாட்ரிப் திட்ட இயக்குநர் நிதின் ஜோக் ரான் பரிசளித்தார். சிறந்த குழு விருதை பெங்களூர் சாய் வித்யா இன்ஸ்டிடியூட்டும், சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதை வேல்டெக் பல்கலைக்கழகமும், சிறந்த படைப்பு விருதை பிரெஞ்ச் தொழில் நுட்ப பல்கலைக்கழகமும் பெற்றன. துணைத் தலைவர் சகுந்தலா ரங்கராஜன், இயக்குநர் கிஷோர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel