இயக்குனரிடம் பிரபு தேவா திடீர் நிபந்தனை
சென்னை: என்னை 22 வயது வாலிபனாக எண்ணி கதை எழுதாதீர்கள் என்று இயக்குனருக்கு நிபந்தனை விதித்தார் பிரபு தேவா. இது பற்றி பிரபு தேவா கூறியது: நடிப்பதைவிட இயக்குவதில் கவனமாக இருக்கிறேன். நடன இயக்குனர் ரெமோ டிசோசா என்னை அணுகி கால்ஷீட் கேட்டபோது ஒரு படத்தில் நடிப்பதற்கு போதுமான அளவு தேதிகள் கைவசம் இருந்தது. இது நடனத்தை மையமாக வைத்த கதை. 3டியில் உருவாகும் படம் என்றதும் ஒப்புக்கொண்டேன். டிசோசாவிடம் ஆரம்பத்திலேயே ஒரு கோரிக்கை வைத்தேன். 22 வயது பிரபுதேவாவை மனதில் வைத்துக்கொண்டு இந்த கதையை அமைக்காதீர்கள்.
எனக்கு இப்போது வயது 39. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். இதில் நான் நடித்திருக்கிறேன். ரெமோதான் கடின உழைப்பை செலுத்தி இருக்கிறார். படத்தில் ஆடியிருக்கும் பாய்ஸ் (நடன கலைஞர்கள்)அசத்தி இருக்கிறார்கள். ‘கோலிவுட்டுக்கு மீண்டும் வருவீர்களா? என்கிறார்கள். தமிழில் நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் எனது டைரியில் வரும் 2017வரை இந்தி பட பணிகள் நிறைந்திருக்கிறது. இப்போதைக்கு ‘ராமய்யா வஸ்தா வய்யா இந்தி படம் இயக்குவதில் பிஸியாக இருக்கிறேன். ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதுதவிர மேலும் 3 படங்கள் கைவசம் இருக்கிறது என்றார்.