Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
04
Feb
நடிகையின் திட்டம்


நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

பறவை பட பால் ஹீரோயின் தன்னோட பேமன்ட்டை பேசிமுடிச்சதும் கூடவர்ற மேக்கப் உள்ளிட்ட பரிவாரங்களும் சேத்து லட்சங்கள்ல பில் போட்றாராம்... போட்றாராம்... இதெல்லாம் ரொம்ப ஓவர். கணக்குல இடிக்கும்னு சொன்னா அவரே ஐடியா சொல்லித் தர்றாராம். ‘என்னோட பேமென்ட் போட்றப்போ இந்த கூடுதல் தொகையை அதுலேயே சேத்துடுங்க. பணத்த நீங்களே பரிவாரங்களுக்கு கொடுத்திடுங்கÕன்னு சொல்றாராம். தொகைய கணக்குபோட்டு பாத்து தயாரிப்புங்க தலை சுத்திப்போறாங்களாம்... போறாங்களாம்...

பெல் இயக்கம் படத்துல நடிச்ச சில ஆர்ட்டிஸ்ட்டுங்க வருத்தத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்... Ôபடத்துக்காக கஷ்டப்பட்டு ந¤றைய சீன்ல நடிச்சோம். ஆனா படம் பாத்தப்போ ந¤றைய சீனை காணோம். அதான் வருத்தமா இருக்குÕன்னு புலம்புறாங்களாம். இது இயக்கம் காதுக்கு போச்சின்னா வம்புனு பயந்து, ‘பெல் இயக்கம் சீனை கட் பண்றாருன்னா, அதுல காரணம் இருக்கும்Õனு ஆறுதல் விளக்கமும் அவங்களே தர்றாங்களாம்... தர்றாங்களாம்...

பாலிவுட் ஷாருக் ஹீரோவோட குத்தாட்டம் ஆட வந்த வாய்ப்பை நயனம், சமந்தம் மறுத்துட்டாங்களாம்...  மறுத்துட்டாங்களாம்... வேற ஆர்ட்டிஸ்ட்டை பாக்கலாம்னு பட குழு ரெடியானதை கேள்விப்பட்டதும், பெல் ஹீரோயின் முழுச்சிகிட்டாராம்... முழுச்சிகிட்டாராம்... டேட்ஸ் எல்லாம் அட்ஜெஸ்ட் பண்ணிட்டேன் எப்ப வேணாலும் ஷூட்டிங்க வச்சிக்குங்கனு சொல்லிட்டாராம். ஷாருக்கோட நட்பை பயன்படுத்தி, ஏதாவது இந்தி படத்துல ஹீரோயின் சான்ஸ் பிடிக்கலாம்கிறது நடிகையோட பிளானாம்... பிளானாம்...

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel