சென்னை: சிறு இடைவெளிக்கு பின் தமிழில் பூர்ணா நடித்துள்ள படம் தமிழில் வெளியாகிறது. துரோகி, வித்தகன், ஆடு புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூர்ணா. குட்டி அசின்போல் இருக்கிறார் என்று அவரைப் பற்றி திரையுலகினர் கூறினாலும் குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலே நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படம் ‘அர்ஜூனன் காதலி. ஜெய் ஹீரோ. சிவசக்தி பாண்டியன் தயாரிப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசை.
பார்த்தி பாஸ்கர் இயக்கம். பார்த்தி பாஸ்கர் கூறும்போது, ‘அப்பா, மகள், காதலன் என மூன்று பேரின் பாசத்தை மையமாக கொண்ட கதை. ஒரு பெண் காதலிப்பதற்கு முன் பெற்றோரிடம் காட்டும் பாசம் பெரிதா? காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் அன்பு பெரிதா என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். சென்னை, மதுரை, குற்றாலம், கும்பகோணம், புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் கேரளாவில் ஷூட்டிங் நடந்துள்ளது என்றார்.