கட்டிடத்தை துளைத்து கொண்டு நின்ற ரயில்
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் புறநகர் பகுதியில் உள்ளூர் ரயில் ஒன்றை சுகாதார துறை ஊழியர் ஒருவர் கடத்தி சென்றார். அப்போது ரயில் தடம் புரண்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ஒரு கட்டிடத்தை துளைத்து கொண்டு நின்றது ரயில். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. சம்பந்தப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.