திருமலை திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் திருப்பதி அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு இலவசமாக திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, இதுவரை தினமும் மாலை 5 மணி வரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் 5 மணிக்கு பிறகு வரும் பக்தர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அறங்காவலர் குழுத் தலைவர் பாபிராஜு திவ்ய தரிசன டிக்கெட் வழங்கும் கவுன்டரை பார்வையிட்டார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறுகையில், Ôமலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் நேரம் திவ்ய தரிசன டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி நேற்று முதல் இரவு 8.30. மணி வரை மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook