டெல்லி மாணவி பலாத்காரத்தை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள ‘ப்ரீடம்‘ என்ற படத்திற்கு ‘கொலை வெறி‘ பாடல் இசை அமைப்பாளர் அனிரூத் இசை அமைப்பதாக இயக்குனர் டான் கவுதம் கூறி இருந்தார். ஆனால் அப்படியொரு படத்துக்கு அனிரூத் இசை அமைக்கவில்லையாம்.
‘சூதுகவ்வும்‘ உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார் ‘பீட்சா‘ ஹீரோ விஜய் சேதுபதி.
ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா‘ இந்தி ரீமேக்கில் நடிக்கும் தமன்னா பாடல் ஒன்றுக்கு அன்று ஸ்ரீதேவி உடுத்திய காஸ்டியும் போலவே உடை அணிந்து சமீபத்தில் நடனம் ஆடினார்.
அதிகாலை 2 மணிக்குகூட போன் செய்து உரிமையுடன் பிருத்விராஜுடன் பேசும் நண்பர்கள் சிலரில் அவர் நடித்த ‘கிளாஸ்மேட்‘ உள்ளிட்ட 2 படத்தை இயக்கிய லால் ஜோஸும் ஒருவராம்.
பிரச்னைகள் முடிவுக்கு வந்து விஷால்த்ரிஷா நடிக்கும் ‘சமர்’ படம் பொங்கலையொட்டி 13ம் தேதி ரிலீசாகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook