சச்சினின் 90 லட்சம் நன்றி
நட்சத்திர வீரரான சச்சின் பேஸ்புக்கில் கடந்த 2011ம் ஆண்டு இணைந்தார். அவரை 90 லட்சம் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் சச்சின், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்தியில் எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. உங்களது ஆதரவு இல்லாமல் எனது 22 ஆண்டு கனவான உலககோப்பையை வென்றிருக்க முடியாது. எனக்காக பிரார்த்தனை செய்த அனை வருக்கும் நன்றி. என்னை ஸ்பெஷலாக உணர செய்த 90 லட்சம் ரசிகர்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன் என கூறியுள்ளார்.