‘பில்லா 2’ படத்தில் நடித்த பார்வதி ஓமனகுட்டன் அடுத்த படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லையாம். பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.
‘கடந்த 10 வருடமாக கவனம் செலுத்தி எழுதிய ‘ருத்ரமா தேவி’ படத்தில் அனுஷ்கா நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறினார் டோலிவுட் இயக்குனர் குணசேகர்.
கோச்சடையான் படத்துக்கு தமிழ் பதிப்பு தவிர ஜப்பான், இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் ரஜினி, தீபிகா டப்பிங் பேசுகிறார்களாம்.
பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கான் அணியும் ஸ்டைலான உடையும், நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் அணியும் ஸ்டைல் உடைகளும் நடிகர் ஜீவாவை மிகவும் கவருமாம்.
‘கடல்’ படத்திற்காக ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ள ‘நெஞ்சுக்குள்ளே’ எம்டிவியில் ஒளிபரப்பானது. அதைப்பார்த்து அமெரிக்க பட தயாரிப்பாளர் நவீன், ரகுமானுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook