டூப் ஹீரோக்கள் நடிக்கும் படம்
சென்னை:டூப் ஹீரோக்கள் நடிக்கும் படம் உருவாகிறது.
ரஜினி, விஜயகாந்த், விஜய், விக்ரம், சிம்பு, பிரகாஷ்ராஜ் என எல்லோரும் ஒரே படத்தில் நடிப்பது கனவில்தான் நடக்கும். ஆனால் அவர்களைப்போல் வேடம் அணிந்து நடிக்கும் டூப் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் ‘மேடை என்ற பெயரில் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் அரிராம் கூறியதாவது:
எல்லா ஹீரோக்களையும் ஒரே படத்தில் பார்ப்பது கடினம். ஆனால் அவர்களைப்போல் மேடையில் மிமிக்ரி செய்யும் குடும்பத்தில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகிறது. டூப் ஹீரோக்களாக மோகன், குமரேசன், கதிர், அசோக், புகழ் நடிக்கின்றனர். ஹீரோயின்கள் சுவேதா பாரதி, தனிஷா மற்றும் தாஸ், பானு நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் ஈரோடு, வெள்ளோடு, ஆசனூர், வெப்படை போன்ற ஊர்களில் நடக்கிறது. ‘உயிர் ஓசைÕ என்ற படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசு விருது வாங்கியிருக்கிறேன். பாலமுரளி ஒளிப்பதிவு. ஆதிஷ் உத்ரியன் இசை. எல்.கே.அந்தோணி, டி.கதிரேசன், சி.பழனிச்சாமி, சி.ரவிச்சந்திரன் தயாரிப்பு. இவ்வாறு அரிராம் கூறினார்.