சவுடு மண் திருட்டு: பெண்ணுக்கு வலை
திருத்தணி: திருத்தணி அருகே உள்ள அரும்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) சந்திரசேகரன் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இல்லத்தூர் கிராமம் உள்ளது. இது திருவள்ளூர் மாவட்ட எல்லையான அரும்பாக்கம் கிராமத்தை ஒட்டிய பகுதி. இல்லத்தூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் மனைவி அமுலு என்பவர், ஏரிகளில் சவுடு மண் எடுத்து விற்று வருகிறார். இவர், எல்லை தாண்டி அரும்பாக்கம் பகுதியிலும் ஜேசிபி மூலம் திருட்டுத்தனமாக சவுடு மண் எடுத்து விற்று வருகிறார். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவ் நேற்று சென்று ஆய்வு செய்த£ர். அங்கு அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். குவாரி உரிமையாளர் அமுலுவை தேடி வருகின்றனர்.