வக்கீல் நோட்டீசால் பரபரப்பு : ஷாருக்,அஜய் தேவ்கன் திடீர் மோதல்
படம் ரிலீஸ் செய்வதில் ஷாருக்கான், அஜய் தேவ்கன் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆகும்போது சில நேரங்களில் பிரச்னை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கோலிவுட்டில் இப்பிரச்னைகள் வருவதுண்டு. அதுபோல் பாலிவுட்டில் இப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. ஷாருக் கான் நடித்துள்ள படம் ‘ஜப் தக் ஹே ஜான் மறைந்த யஷ் சோப்ரா இயக்கி உள்ளார். அவரது யஷ் ராஜ் நிறுவனமே படத்தையும் தயாரித்திருக்கிறது. வரும் 13ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் அஜய் தேவ்கன் நடித்துள்ள ‘சன் ஆஃப் சர்தார் படமும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இப்படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காத வகையில் யஷ் ராஜ் நிறுவனம் தடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அஜய் தேவ்கன் கோபம் அடைந்தார். பாலிவுட்டில் பெரிய நிறுவனமாக திகழும் யஷ் ராஜ் நிறுவனம் தனது செல்வாக்கை பயன்படுத்தி எங்கள் படத்துக்கு தியேட்டர்கள் தரவிடாமல் சதி செய்கிறது என்று புகார் கூறியிருக்கும் அஜய் அந்நிறுவனத்துக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பினார். இதை ஷாருக், அஜய் இடையிலான நேரடி மோதலாக பார்க்கிறது பாலிவுட். இதுபற்றி ஷாருக்கான் கூறும்போது, ‘போதுமான தியேட்டர்கள் மும்பையில் இருக்கிறது. இது சட்ட ரீதியான விவகாரமாகி இருக்கிறது. எனவே அதுபற்றி பேச விரும்பவில்லை. நல்லவேளையாக ஜப் தக் ஹே ஜான் தயாரித்தது எனது சொந்த நிறுவனம் அல்ல. இப்பிரச்னை பேசி தீர்க்கப்படும் என்ற நம்புகிறேன். இரண்டு படங்களும் நன்றாக ஓடும். இதனால் எனக்கும் அஜய் தேவ்கனுக்கும் எந்த தகராறும் இல்லை. மற்ற யாரிடமும் எனக்கு பிரச்னை கிடையாது என்றார்.