சென்னை: ஷூட்டிங் நேரம் முடிந்தும் பணியாற்றிய தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள் சம்பளத்தை விட்டுகொடுத்ததாக கூறினார் இயக்குனர். இது பற்றி ‘சத்திரம் பேருந்து நிலையம் பட இயக்குனர் ரவிபிரியன் கூறியதாவது: படித்த இளைஞர்கள் டாஸ்மாக்கில் வேலை செய்கின்றனர். அவர்களை இந்த சமூகம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறது என்ற கருவுடன் ஹீரோவின் காதல், சபதம் ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இரவு காட்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் எடுக்க முடிவு செய்து பட குழுவுடன் சென்றோம். அங்கு அரசியல் பிரமுகர் ஒருவரின் வருகையால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஷூட்டிங் நடத்த அனுமதிக்கவில்லை.
சில நிமிடங்களில் முடித்துவிடுகிறோம் என்ற சொன்னதையடுத்து அனுமதித்தனர். சொன்ன நேரத்துக்குள் முடிக்காமல் போனால் ஊழியர்களுக்கு டபுள் சம்பளம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கேமரா மேன் விரைவாக செயல்பட்டார். 4 நிமிட காட்சியை ஒரே டேக்கில் எடுத்தோம். ஆனாலும் சில நிமிடங்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருந்தது. சிறிய பட கம்பெனி என்பதால் டபுள் சம்பளம் கேட்காமல் தொழிலாளர்களும், டெக்னிஷியன்களும் விட்டுக்கொடுத்தனர். ரோஷன் ஹீரோ. டுவிங்கிள், சுவாதி ஹீரோயின். படத்தில் டுவிங்கிள் ஏற்கும் பாத்திரத்துக்கு சாதனா என பெயரிடப்பட்டது. அந்த கேரக்டர் பிடித்துவிடவே அதையே தனது பெயராக மாற்றிக்கொள்வதாக கூறினார். பாண்டியராஜன், நளினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவிசுந்தரம் ஒளிப்பதிவு. ஸ்ரீராம் இசை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook