Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
26
Oct
உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது.


உடல் பருமனா உலக சுகாதார நிறுவனம் (WHO)அறிக்கையின் படி உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity. இது நேரடியாக இல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால் நிச்சயம் அனைவரும் சிறுவயது முதல் இளம் வயதினராலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். முப்பது நாட்களில் எடை குறைய எளிய முறை என்ற விளம்பரத்தைப் பார்த்து சிலர் அதை பின்பற்றினாலும் முற்றிறும் எடை குறைய வாய்ப்பில்லை என்று விரக்தி அடைபவர்கள் தான் அதிகம்.

உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது.

நமது சூற்றுபுறச்சூழல், பழக்கவழக்கம், பரம்பரை, உடல்வாகு, உல்லாச நட்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையும் தான். முக்கியமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் குழந்தைகளுக்கு அம்மா வேண்டாம். பாஸ்ட்டா கிண்ணம் காலி. வயதானவர்களுக்கோ கேட்க வேண்டாம் டிவியில் பத்து சீரியலோடு நொறுக்குத் தீனியும் தேவை. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு, கொழுப்பு பதார்த்தங்கள், சோபா படுக்கை, டிவியே கதி என இருப்பவர்களுக்கு ஏறிய பருமனை குறைக்க யோசிக்க கூட நேரமில்லை.

பந்திக்கு முந்து என்று சொல்லிக் கொண்டு ஒரு கை பார்க்கும் திருமண விருந்து! பிறந்த நாள் திருமண நாள் பார்ட்டிகள் அலுவலகத்தில் நட்ப்புக்காக கொஞ்சம் ஸ்நாக்ஸ் அது தவிர வீட்டுக்கு போய் சேர்வதற்குள் வழியிலுள்ள சாலையோர பதார்த்தங்கள் வீட்டுக்குச் சென்றதும் மனைவியின் அன்பு வரவேற்புடன் சாப்பாடு இவை எல்லாமே உடல் பருமனுக்கு காரணங்கள் தான் சாப்பிடும் உணவு தான் உங்கள் தோற்றம் குண்டாக காரணம்.
 
குண்டாக இருந்தால் என்ன? ஏன் இளைக்க வேண்டும் என கேட்கீறீர்களா. முதலாவது இந்த உடல் பருமனால் தேவையில்லாத நோய்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து விடுகிறது. இதில் முக்கியமாக உயிருக்கு அபாயமான சர்க்கரை நோய், பித்தப்பை கற்கள், இரத்த கொதிப்பு, இதய நோய், ஸ்ட்ரோக், மார்பக புற்றுநோய், குடல் மற்றும் விரைப்பை (ப்ராஸ்டட்) புற்றுநோய், சிறுநீர் கசிவு, வயிற்றில் ஆசிட் உற்பத்தியால் வரும் GRED, என்பவை மிக முக்கியமானவை.

இது மட்டுமா அன்றாட கடமைகளுக்கும் பிறரை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். குளிப்பது முதல் ஆடை அணிவது வரை ஏன் செருப்பு கூட போட முடிவதில்லை. அவர்களுக்கான ஆடைகளும் சரியாக கிடைப்பதில்லை. சருமத்தில் அரிப்பு படை  புண் போன்ற வரும். நடக்கவும் முடுயாது. வீட்டு வேலைகளை செய்யவும் முடியாது. மாடிப்படியில் ஏறவும் முடியாது அப்பப்பா  ஒவ்வொன்றுமே நினைத்தாலே சிரமம் தான். இதற்கும் ஒரு படி மேலாக கணவன் மனைவியரிடையே நாள்தோறும் சண்டை.

வேலை செய்யும் இடத்திலோ காதுப்பட கிண்டல் கேலிகள் இதனால் வேலைகூட செய்யமுடிவதில்லை. பார்ட்டி திருமணம் எங்கும் செல்ல முடிவதில்லை பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கோ பள்ளியில் கேலிப்பேச்சு தனிமை என்று மனதை வதைக்கும் தாழ்வு மனப்பான்மை இதனால் ஏற்படுகிறது.

நோய்களும் மன அழுத்தமும் சேர்ந்து உடல் பருமனாக உள்ள ஒருவரை வாழ்க்கையின் எல்லைக்கே கொண்டு போய் விடுகிறது. நோய்களாலும் தாழ்வு மனப்பான்மையினாலும் விரக்தியடைவதால் இறுதியில் மரணமே மிஞ்சுகிறது. இதற்கெல்லாம் முடிவே இல்லையா ஏன் இல்லை மனமிருந்தால் மார்க்கம் உண்டு. தினமும் சிறிதளவாவது உடற்பயிற்சியும் முழுமையான உடல் கட்டுப்பாடும் மேற்கொண்டால் போதும்..

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana