சாம்பியன்லீக் 20-20ல் இன்று கேப்டவுனில் நடக்கும் ஆட்டத்தில் ஆக்லாந்து அணியை கொல்கத்தா எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் டெல்லியுடன் தோல்வியடைந்த கொல்கத்தா இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. காம்பீர் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். மெக்குலம், காலிஸ் கைகொடுத்தால்தான் கொல்கத்தாவுக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும். அதேசமயம் ஆக்லாந்து அணியில் மில்ஸ், அசார்முகமது, காப்கின்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுவார்கள். போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
சென்னைக்கு நாளை 2வது ஆட்டம்
சென்னை அணி நாளை 2வது ஆட்டத்தில் மோதுகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் சிட்னி அணியிடம் தோல்வியடைந்தது. நாளை இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை களமிறங்குகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook